பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

 

கோவை, ஆக. 26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சாலை போக்குவரத்து மசோதாவை தமிழ்நாட்டில் அமல்படுத்தியதன் விளைவாக ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகளிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆன்லைன் அபராத முறையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது. சட்டவிரோதமாக செயல்படும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். அந்த தொழிலில் ஈடுபடும் கார்ப்பரேட் கம்பெனிகள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்திட வேண்டும். மேலும், நல வாரியத்தின் மூலம் புதிய ஆட்டோக்கள் வாங்க பெண் ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்குவதை போல, ஆண் ஓட்டுனர்களுக்கும் ரூ.1 லட்சம் மானியம் வழங்க வேண்டும். 30 ஆண்டுக்கு மேலாக ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டி வரும் ஓட்டுனர்களுக்கு பாஸ் வழங்க ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு