பரமத்திவேலூர் அருகே சாலை பணிகள் தொடக்கம்

பரமத்திவேலூர், மார்ச் 1:பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியான தண்ணீர் பந்தல்மேடு பகுதியில் இருந்து சுண்டப்பனை பிரிவு வரையிலான சாலையை மேம்படுத்தும் பணிக்காக நபார்டு வங்கி மூலம் ₹72.30 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இதையடுத்து, அதற்கான பூமிபூஜை நடைபெற்றது. பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் யசோதா முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், பேரூராட்சி அலுவலர்கள், பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வைரமணி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி துணை தலைவர் அன்பரசு நன்றி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்