பயணிகளை ஏற்றாத தனியார் பஸ் சிறைபிடிப்பு

பள்ளிபாளையம்: ஈரோட்டிலிருந்து வெப்படைக்கு பயணிகளை ஏற்றாத தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.சேலத்திலிருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ்களில், வெப்படைக்கு பயணிகளை ஏற்றுவதில்லை. அப்படி ஏற்றினாலும் அவர்களுக்கு இருக்கை கொடுப்பதில்லை.இந்நிலையில் நேற்று மாலை, சேலம் பஸ் ஸ்டாண்டில், தனியார் பஸ்சில் ஏறிய பஞ்சாலைத் தொழிலாளி அர்ஜூனன், வெப்படைக்கு டிக்கெட் கேட்டுள்ளார். வெப்படையில் பேருந்து நிற்காது என கூறிய டிரைவரும் நடத்துனரும், அர்ஜூனனுடன் தகராறு செய்து, அங்கேயே இறக்கி விட்டுள்ளனர்.
இது குறித்து வெப்படையில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆக்கிரமடைந்த அர்ஜூனின் உறவினர்களும், பொதுமக்களும் வெப்படை வந்த தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், தனியார் பஸ் நிர்வாகிகள், இனிமேல் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related posts

(வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்

(வேலூர்) 450 கிலோ வெல்லம் பதுக்கிய 2 பேர் கைது பேரணாம்பட்டில் போலீஸ் அதிரடி சாராய வியாபாரிகளுக்கு விற்க

பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2 மகள்களின் தந்தை போக்சோவில் கைது கே.வி.குப்பம் அருகே