பத்தாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சிதிலமடைந்த நிழற்குடையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கரூர், டிச.22: கரூர் மாவட்டம் ஈசநத்தம் சாலையில் பத்தாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சிதிலடைந்த நிலையில் உள்ள நிழற்குடையை அகற்றி விட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூரில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோடங்கிப்பட்டி, பத்தாம்பட்டி வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், கோடங்கிப்பட்டியை தாண்டியதும் பத்தாம்பட்டி பகுதி உள்ளது. பத்தாம்பட்டி பிரிவுச் சாலையோரம் பயணிகள் நலன் கருதி பல ஆண்டுகளூக்கு முன் நிழற்குடை அமைத்து தரப்பட்டது. ஒருசில ஆண்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது பாழடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பத்தாம்பட்டி, மூக்கணாங்குறிச்சி, சின்னமநாயக்கன்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் இந்த பிரிவின் அருகே நின்றுதான் பஸ் ஏறிச்செல்கின்றனர். ஆனால், சிதிலடைந்த நிலையில் உள்ள நிழற்குடையை யாரும் பயன்படுத்துவதில்லை. மாறாக, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் உள்ளே சென்று சரக்கு அடிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர். நிழற்குடையின் உட்புறம் உடைந்த பாட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு நிரம்பியுள்ளன. இதன் காரணமாக இதன் அருகில் நிற்கவே அனைவரும் அச்சப்படுகின்றனர். எனவே, அனைவரின் நலன் கருதி, சிதிலடைந்த நிலையில் உள்ள இந்த அகற்றி விட்டு புதிதாக நிழற்குடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு