பணி நிறைவு பாராட்டு விழா

ஏற்காடு, மார்ச் 15: ஏற்காடு தாலுகாவில் உள்ள நாகலூர் கிளை அஞ்சலகத்தில், பெரியசாமி என்பவர், 45 ஆண்டுகளாக கிளை அஞ்சல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் பணி நிறைவு பெற்றதால் அவருக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில் பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன், சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளர் பார்த்திபன், சேலம் தெற்கு கோட்ட உதவி கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், சேலம் கோட்ட முன்னாள் கண்காணிப்பாளர் அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஏற்காடு மற்றும் ஒண்டிக்கடை துணை அஞ்சலகங்களுக்கு உள்பட்ட 21 கிளை அஞ்சலக பணியாளர்கள், தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்