பணம் கேட்டு வாலிபரை தாக்கி ரவுடி அட்டகாசம்

ஓமலூர், மே 10: ஓமலூர் அருகே, காமலாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், காமலாபுரம் கீழ் வீதியை சேர்ந்த ரவுடி ஒருவர், டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வரும் நபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது காமலாபுரம் பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் மது வாங்க வந்துள்ளார். அப்போது ரவுடி அவரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் தர மறுத்தபோது, நான் ரவுடிடா என்று மிரட்டியதுடன் மது பாட்டிலால் அடித்துள்ளார். மேலும், பெல்ட்டிலும் முதுகில் அடித்து தாக்கியுள்ளார். இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமலாபுரம் ரவுடி மீது, ஏற்கனவே ஓமலூர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பணம் பறிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்