பட்டுபோன பனை துளிர்விட்டது திருமயத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

 

திருமயம், ஜன.26: திருமயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, 14-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை, தாசில்தார் புவியரசன் தொடக்கி வைத்தார். திருமயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் பேருந்துநிலையம் வழியாக சென்று தாசில்தார் அலுவலக வளாகத்தை சென்றடைந்தது. இதில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தாசில்தார் அலுவலகப் பணியாளர்கள் 120க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

முன்னதாக, வாக்காளர்களின் உறுதிமொழியான, `‘இந்தியக் குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூகத் தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதியளிக்கிறோம்” என்ற உறுதிமொழியினை, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்