பட்டுக்கோட்டையில் உழவர் ஆலோசனை குழு கூட்டம்

பட்டுக்கோட்டை, பிப்.13: பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உழவர் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தலைமை வகித்தார். ஆலோசனைக் குழு தலைவர் துரைவீரையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மாலதி, தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வரும் மாநிலத்திற்கான விவசாயிகள் பயிற்சி மற்றும் கண்டுணர்வு சுற்றுலா, வானூர்தியின் மூலம் பிபிஎப்எம் (PPFM) ஸ்பிரே தெளிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளிடம் தெளிவாக எடுத்துக் கூறினார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் வரவேற்றார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ் மற்றும் அமிர்தலீலியா ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்