பட்டாசு கடைகள், பட்டாசு குடோன்களை மூட கலெக்டர் உத்தரவு

விருதுநகர், ஏப். 17: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள நாட்கள் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள நாட்கள் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் உள்ள காலகட்டத்தில் வெடிபொருள் பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்கள் செயல்பட தடைவிதித்தும் மற்றும் மூடவும், மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பட்டாசுகள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்திடுமாறும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி அரசாணையின்படி, 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வெடிபொருள் பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களும் இயங்குவதை நிறுத்தம் செய்து மூடிட வேண்டும் என பட்டாசு கடை மற்றும் குடோன்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேற்படி காலகட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்து, விருதுநகர் மாவட்டத்திற்கு பட்டாசுகள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கைகளை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு