நொளம்பூர் அருகே முட்புதரில் இளம்பெண் எரித்து கொலை: போலீசார் விசாரணை

அண்ணாநகர்: மதுரவாயல் லட்சுமி நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (37), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரேவதி (34). தம்பதிக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று மதியம் 12 மணியளவில், முருகன் தனது மனைவியை காணவில்லை என்று மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரேவதியை தேடி வந்தனர். இந்நிலையில், நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள முட்புதரில் கைகள் கட்டப்பட்டு, முழுவதும் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில், முருகனுக்கு தகவல் கொடுத்து, அவரை அங்கு வரவழைத்தனர்.அதன்படி அங்கு விரைந்து வந்த முருகன், அந்த இடத்தில் கிடந்த ரேவதியின் ஆதார் அட்டையை வைத்து, கொலை செய்யப்பட்டது தனது மனைவி ரேவதி என அடையாளம் காட்டினார். இதையடுத்து, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, ரேவதி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தது யார் என விசாரணை செய்து வருகின்றனர்….

Related posts

தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 16 வயது சிறுவனை கடத்திய 2 குழந்தைகளின் தாய் கைது

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு