நெல்லை அருகே வக்கீல் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை,மார்ச் 21: வீரவநல்லூர் அருகே வக்கீல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூர் பாறையடி காலனியை சேர்ந்தவர் அர்ச்சுணன் மகன் மந்திரமூர்த்தி (27). சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவரது மனைவி வெங்கடேஷ்வரியும் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த மந்திரமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மந்திரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி