நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை

நெல்லை, ஜூலை 16: நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி முக்கிய திருவிழாக்களின் போது சுவாமி வீதி உலாவின் போது அலங்கரிக்கப்பட்டு ரதவீதிகளில் அழைத்து வரப்படும். மேலும் கோயில் தீர்த்தம் எடுத்துவரும் போதும் யானை அழைத்து வரப்படுகிறது. கடந்த ஆண்டு யானையின் உடல் எடை கூடியதால் அதற்கு மிதமான நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. மூலிகை உணவு அளிக்கப்படுகிறது. கோயில் தெப்பக்குளத்தில் நீராடி மகிழ்கிறது. கோயில் யானைக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு உடல் நலம் பராமரிக்கப்படுகிறது. ராமையன்பட்டி கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக்குழுவினர் மற்றும் புரம் கால்நடை மருத்துவமனை மருத்துவக்குழுவினர் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் வந்து யானையின் உடல் நலத்தை பரிசோதிக்கின்றனர். நேற்று காந்திமதி யானைக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இது வழக்கமான பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை