நெல்லையப்பர் கோயிலில் இலவச மருத்துவ முகாம்

நெல்லை, மே 24: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் மாநகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற பக்தர்கள்,கோயில் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நெல்லை மாநகரில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயிலுக்கு தினமும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயில் பணியாளர்களுக்கு மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் பேரில் பாட்டபத்து ஆரம்ப சுகாதார நிலையம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ குழு சார்பில் மக்களை தேடி மருத்துவ முகாம் டவுன் நெல்லையப்பர் கோயிலில் நடந்தது. முகாமை கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு டாக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, காய்ச்சல், இருமல் சளி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். இவர்களில் தேவைப்பட்டோருக்கு மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்