‘நீட்’ தேர்வில் சிறப்பிடம் பெற்ற புஷ்பலதா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

நெல்லை, ஜூன் 16: தேசிய தேர்வு முகமை நடத்தி மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வில் பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பலர் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பரத்ராஜ், திவ்ய தர்ஷனி ஆகியோர் 656 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் வந்துள்ளனர். 651 மதிப்பெண் எடுத்த செல்வ தரன் 2ம் இடத்தையும், 648 மதிப்பெண் பெற்று ஐஸ்வர்யா 3ம் இடத்தையும் பெற்றனர். மேலும் 650 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேரும், 600 மதிப்பெண்களுக்கு மேல் 13 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 20 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 29 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 55 மாணவர்களும் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அணைவரும் முதல் முயற்சியிலேயே இந்த மதிப்ெபண்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளி முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்