நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு சரபோஜி சந்தை வியாபாரிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

தஞ்சாவூர், பிப்.29: தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் மொத்தமாக 306 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்காக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஏலத்தில் வியாபாரிகள் சிலர் அதிக வாடகைக்கு கடைகளை ஏலம் எடுத்தனர். ஆனால் வியாபாரம் சரிவர நடைபெறாததால் கடைகளை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
அதன் பிறகு இந்த ஆண்டு நடந்த ஏலத்தின் போது வாடகையை குறைவாக நிர்ணயம் செய்து வியாபாரிகள் சிலருக்கு கடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாடகை வித்தியாசத்தை சரி செய்து அனைத்து கடைகளுக்கும் அந்தந்த கடைகளின் அளவுக்கு ஏற்ப ஒரே மாதிரியான குறைந்த வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என சரபோஜி சந்தை வியாபாரிகள் நல சங்கத்தினர் மாநகராட்சி ஆணையரை ஏற்கனவே சந்தித்து மனு அளித்தனர். ஆனால் தேர்தல் நெருங்கி வருவதால் 4 மாதங்கள் கழித்து வாருங்கள் பார்க்கலாம் என ஆணையர் கூறியதால் வியாபாரிகள் வழக்கம் போல் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் சரபோஜி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடைக்கு சீல் வைத்தனர்.

வாடகை பாக்கி இருப்பதாக கூறி எடுத்த இந்த நடவடிக்கையை கண்டித்து பெரும்பாலான வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் சரபோஜி சந்தை வியாபாரிகள் நல சங்க தலைவர் சுதாகர், செயலாளர் கனி, பொருளாளர் சிவக்குமார் மற்றும் வியாபாரிகள் மாநகராட்சி சென்று அலுவலகத்திற்கு ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் வியாபாரிகளுக்கு திருப்தியான பதில் கிடைக்காததால் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து தஞ்சை கீழவாசல் சரபோஜி சந்தை வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சந்தையில் கடைகளின் வாடகையில் முரண்பாடு இருப்பதாகவும், அதனை சரி செய்து சதுரடி கணக்கில் வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி