நாமக்கல் அருகே 1 டன் ரேஷன் அரிசி பதுக்கிய முதியவர் கைது

நாமக்கல், ஏப்.11: நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய 1.115 கிலோ ரேஷன் அரிசியை, வீட்டின் அருகே பதுக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அருகே உள்ள கொண்டம்பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த ராசப்பன் என்பவர், வீட்டின் அருகில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து உள்ளதாக, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ஆறுமுக நயினார், சிறப்பு எஸ்ஐ ஜானகிராமன் மற்றும் போலீசார், அங்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை கார்டுதாரர்களிடம் இருந்து ராசப்பன் (67) என்பவர் வாங்கி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அவர் பொதுமக்களிடம் இருந்து அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சேந்தமங்கலம் பகுதியில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பதுக்கி வைத்திருந்த 1,150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ராசப்பனை கைது செய்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு