நாகுடியில் கல்லணை கால்வாய் பாசன ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் கல்லணை கால்வாய் பாசன ஒருங்கிணைப்பாளர்கள் சங்க ஆலோசணை கூட்டம் நாகுடியில் சங்கத்தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடகோரி, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 13ம் தேதி நாகுடி பேருந்து நிலையத்தில் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கவுரவ தலைவர் அத்தாணி ராமசாமி, பொருளாளர் மைவயல் கோவிந்தராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமூர்த்தி, கார்த்திகேயன், குமாரசாம், ராஜேந்திரன், அருணாசலம், செல்வகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்