நட்சத்திர ஓட்டலில் தீ: 2 வாடிக்கையாளர் பலி: கேரளாவில் சோகம்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம், பாலக்காடு அருகே மன்னார்காடு, நெல்லிபுழா ஹில்வியூவில் நான்கு மாடி  நட்சத்திர ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 3.45  மணியளவில் இந்த ஓட்டலின் தரைதளத்தில் உள்ள அறையில் இருந்து திடீரென தீ  பிடித்தது. சிறிது நேரத்தில் அனைத்து தளங்களுக்கும் தீ பரவியது. அறையில் தங்கியிருந்தவர்களும், ஓட்டல் ஊழியர்களும் அலறியடித்து வெளியே  ஓடி வந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 4வது மாடியில் உள்ள அறையில் ஒரு ஆணும், பெண்ணும் மலப்புரம் அருகே தலக்களத்தூர் பகுதியை சேர்ந்த  முகமது பசீர் (58), பட்டத்தாந்தி பகுதியை சேர்ந்த புஷ்பலதா (42) இருவரும் இறந்து கிடந்தனர். புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு இவர்கள் இறங்கிருக்கலாம்  என போலீசார் கருதுகின்றனர்….

Related posts

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் : நீதிமன்றம் அனுமதி

பிரதமர் பதவிக்கு எனது விருப்பம் ராகுல் காந்தி: கார்கே பரபரப்பு பேட்டி

உச்ச நீதிமன்ற கொலிஜியம் விவரங்களை கேட்ட மனுதாரருக்கு ரூ.25000 அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி