நடிகை ஷோபிதாவுடன் நாக சைதன்யா வெளிநாடு டூர்

ஐதராபாத்: நடிகர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலா ஜோடியாக வெளிநாடு டூர் சென்றுள்ளனர். நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, சமந்தா காதலித்து மணந்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டனர். பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் தோழி வானதியாக நடித்தவர் நடிகை ஷோபிதா துலிபாலா. இந்நிலையில் ஷோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக தகவல் பரவியது. இதை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு இந்த ஜோடி பறந்து சென்றுள்ளது. அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. ஷோபிதாவை நாக சைதன்யா காதலிப்பதாக தகவல் வெளியானபோது, சமூக வலைத்தளத்தில் அப்படியெல்லாம் இல்லை என பதிவு செய்தவர் சமந்தா. அப்போது அவர் நாக சைதன்யாவை பிரிந்துவிட்டார். ஆனாலும் அவரது காதல் விவகாரத்தில் தலையிட்டதற்காக நெட்டிசன்கள் பலரும் சமந்தாவை கண்டித்தனர்….

Related posts

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு