நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தொடர் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பலாத்கார வழக்கில் 8வது நபராக சேர்க்கப்பட்டு உள்ள நடிகர் திலீப்பிடம் 28ம்தேதி (நேற்று) போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்தனர். இது தொடர்பாக கடந்த வாரம் திலீப்புக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.அதன்படி நேற்று காலை எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா போலீஸ் கிளப்பில் நடிகர் திலீப் ஆஜரானார். அவரிடம் குற்றப்பிரிவு ஏடிஜிபி ஜித் தலைமையில் 2 எஸ்பிக்கள் விசாரணை நடத்தினர். நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ திலீப்பிடம் இருப்பதாக சினிமா இயக்குனர் பாலச்சந்திரகுமார் ஏற்கனவே கூறியிருந்தார். இதேபோல் திலீப்பின் செல்போனில் இருந்த பல முக்கிய விவரங்கள் அழிக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவை தொடர்பாக போலீசார் திலீப்பிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை 6.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது. இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் நடிகர் திலீப் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்….

Related posts

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்