தோட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி சாவு

கயத்தாறு, மார்ச் 19: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள தெற்கு மயிலோடை கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜனின் மகன் ஜான் சாமுவேல் (37). விவசாயி. இவரது மனைவி சகாயமேரி. தம்பதிக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். ஜான் சாமுவேல் ஊருக்கு அருகே உள்ள தனது தோட்டத்தில் பூச்செடிகள் பயிரிட்டுள்ளார். நேற்று காலை தனது மனைவி சகாயமேரியுடன் தோட்டத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜான் சாமுவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரது மனைவி சகாயமேரி மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜான் சாமுவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயி தோட்டத்தில் மயங்கி விழுந்து இறந்தது கயத்தாறு பகுதி பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு