கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை

கோவில்பட்டி, மார்ச் 19: கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் காசி என்ற பயில்வான். இவர், மீது கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவருக்கு கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்த போதும் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாகவே இருந்துவருகிறார். இதையடுத்து அவரை கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கைது செய்து வரும் 28ம்தேதி ஆஜர்படுத்த கிழக்கு காவல்நிலைய போலீசாருக்கு கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி