தோகைமலை அருகே பதுக்கி வைத்து மது விற்ற முதியவர் கைது

தோகைமலை மார்ச் 24: தோகைமலை அருகே பதுக்கி வைத்து மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். தோகைமலை காவல் சரகம் கல்லடை ஊராட்சி கல்லடை மெய்யப்பன் மகன் முத்துச்சாமி ( 64). இவர் அதேபகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் அந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது முத்துச்சாமி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை