தொழில் மையத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு

நாகர்கோவில், மார்ச் 19 : இந்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு மையம், டெக்விமல் கார்ப்பரேசன் இந்தியா லிமிடெட் ஆகியவை இணைந்து சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் கருத்தரங்கு குமரி மாவட்ட தொழில் மைய கட்டிடத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு கன்னியாகுமரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பெர்பெட் தலைமை வகித்தார். கருத்தரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்க குமரி மாவட்ட தலைவர் நாகராஜன், மேற்கு மாவட்ட தலைவர் அல்அமீன், மற்றும் டெக்விமல் கார்ப்பரேசன் இந்திய லிமிடெட் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் னிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இந்த கருத்தரங்கில் மாவட்டத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சிறு,குறு நிறுவனங்களுக்கான பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்