தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

சேலம், ஏப்.11: சேலம் அயோத்தியாப்பட்டணம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்(43). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் இடையே, நிலத்தகராறு இருந்து வருகிறது. நேற்று முன்தினம், சுந்தரம் வீட்டின் முன்பு வைத்திருந்த செடிகளை, சரக்கு வாகனம் மூலம் சண்முகம் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுந்தரம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது சண்முகம், அவரது தம்பி விஜயகாந்த், தந்தை முருகன் ஆகியோர், சுந்தரத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் காயம் அடைந்த சுந்தரம், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், காரிப்பட்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு