தொண்டி அருகே சமூக நல்லிணக்க சந்தன கூடு ஊர்வலம்

தொண்டி,ஆக.4: தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நெய்னா முகம்மது ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தன கூடு ஊர்வலம் நடைபெற்றது.தொண்டி அருகே உள்ள பாசிபட்டினத்தில் சர்தார் நெய்னா முகம்மது ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழா கடந்த 24ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த 1ம் தேதி ஹத்தம் ஒதி, தமாம் சிறப்பு பயான் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை மானவ நகரி கிராமத்திலிருந்து சந்தன கூடு ஊர்வம் புறப்பட்டது. பல கிராமங்கள் வழியாக தர்ஹாவை அடைந்து மூன்று முறை வலம் வந்தது. உருஸ் என்னும் சமூதாய நல்லிணக்க சந்தன கூடு ஊர்வலத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு