தேய்பிறை பஞ்சமி பூஜை

 

ராமநாதபுரம், ஜூலை 8: ஆனி மாத தேய் பிறை பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹிஅம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சுயம்பு மஹா வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகம் நடந்தது.

அதனை தொடர்ந்து சந்தனம், மஞ்சளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனையடுத்து ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அம்மன் காப்பு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டது. பொதுமக்கள் அம்மனுக்கு மஞ்சள் காப்பு செலுத்தியும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்