தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

 

கம்பம், செப். 27: தேனி தெற்கு மாவட்டத் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்எ தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், கம்பம் (வடக்கு) நகர செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கராத்தே இராமகிருஷ்ணன், சுகுமாறன், பிரபாகரன், முருகன், ஸ்டீபன்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செஞ்சூரி செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், இல்லந்தோறும் இளைஞரணி நிகழ்ச்சி வாயிலாக, மாவட்டம் முழுவதும் புதிய இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு நூலகம் (படிப்பகம்) திறத்தல், தேனி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தினை சிறப்பித்தல், மாரத்தான் போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகளை நடத்துதல், டிசம்பரில் நடைபெற இருக்கும், இரண்டாவது மாநில இளைஞரணி மாநாட்டை சிறப்பிப்பது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அபுதாகீர் நன்றி கூறினார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு