தேனி சரக்கு ரயில் நிலைய சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

 

தேனி, ஜூன் 7: தேனியில் சரக்கு ரயில் நிலையத்திற்கு செல்வதற்கான சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரையில் இருந்து போடி செல்வதற்கான அகல ரயில் பாதை திட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில்முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கான்கிரீட் ஓடுதளம் அமைக்கும் பணி, சரக்கு ரயில்நிலைய அலுவலகம் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள குட்ஷெட் தெருவின் வழியாக சரக்கு முனையத்திற்கு செல்வதற்கான பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைந்த பிறகு, சரக்கு ரயில் முனையம் செயல்பட உள்ளது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை