தேனி அருகே மாவட்ட செஸ் போட்டி

தேனி, ஜூன் 13: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தன. தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா கல்வி நிறுவனம் மற்றும் தேனி கலை, அறிவியல் கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. இப்போட்டிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜவஹர்லால், செயலாளர் கலைவாணி ஜவஹர்லால் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் சுருதிமோகன்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவு மற்றும் 18 வயதிற்கு மேலானோருக்கான பிரிவு ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட்டது. அடுத்தடுத்த பரிசுகளாக ரூ.7,500, ரூ.5,000 மற்றும் ரூ.2,500 மற்றும் கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவபெருமாள் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதன்மை நடுவர் சையதுமைதீன் கலந்து கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜதுரை செய்திருந்தார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு