தேனி அருகே சீப்பாலக்கோட்டையில் வேளாண்மை மாணவியர் விவசாயிகளுக்கு பயிற்சி

 

தேனி, ஆக. 22: தேனி அருகே சீப்பாலக்கோட்டையில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவியர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். திண்டுக்கல் காந்திகிராம பல்கலை கழகத்தில் இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிப்பவர்கள் விவேதா, ஆர்யலக்ஷ்மி, தாராலக்ஷ்மி, அனு பாபு, பிரவீணா. இவர்கள் தேனி அருகே சீப்பாலக்கோட்டையில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்க்கொண்டு வருகின்றனர்.

இதன்ஒரு பகுதியாக தேசிய தேனீக்கள் தினத்தை சீப்பாலக்கோட்டையில் கொண்டாடினர். இதில் பெண்களுக்கு விவசாயத்தில் தேனீயின் முக்கியத்துவம், தேனீ வளர்ப்பு, தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் வரும் தேனீ வளர்ப்பு திட்டம், மற்றும் தேன் மதிப்பூட்டல் குறித்து விளக்கினர். மேலும் தொழில்முனைவோரான மதி பிரீத்தி தேனில் மதிப்பூட்டல் செய்த பீ வாக்ஸ் கிரீம், சோப், லிப் பால்ம் ஆகியவை குறித்தும் விளக்கினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்