தெற்கு கோனார்கோட்டையில் தேர்வு, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கயத்தாறு, மே 18:தெற்கு கோனார்கோட்டை அண்ணா காலனியில் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழா, 10 , பிளஸ்2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்னு பாண்டியன், கணபதி பாண்டியன், வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ், திமுக கிளைச் செயலாளர்கள் செந்தூர்பாண்டியன், செல்லத்துரை, ராஜாபுதுக்குடி பால்ராஜ், சதீஷ், கயத்தாறு லோகேஷ் குமார், மகேந்திரன் மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை