உடன்குடியில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

உடன்குடி,மே18: குலசேகரன்பட்டினம் சப்.இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் உடன்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடன்குடி பகுதியில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடன்குடி பண்டாரவிளைதெருவை முருகன்(74) என்பவரது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்