தூத்துக்குடி அருகே லாரி மோதி மூதாட்டி பலி

தூத்துக்குடி, மார்ச் 11: தூத்துக்குடி அடுத்த குமரெட்டியாபுரம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண், லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அடுத்த குமரெட்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மனைவி தாயம்மாள்(55). இவர் கடந்த குமரெட்டியாபுரம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அருப்புக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கஜேந்திரராஜ் என்பவர் ஓட்டி வந்த லாரி, தாயம்மாள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்துவந்த சிப்காட் போலீசார், தாயம்மாளின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து சிப்காட் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

 

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு