தூத்துக்குடியில் டிட்டோ ஜாக் அமைப்பினர் உண்ணாவிரதம்

தூத்துக்குடி: தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணையை (எண் 243) ரத்துசெய்ய கோரி தூத்துக்குடியில் டிட்டோஜாக் அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தனர். தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஜீவா வரவேற்றார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி தலைமை செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்