குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

உடன்குடி: தை மாத பவுர்ணமியை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரலிங்கம் மீனாட்சி, ராமச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாலச்சந்தர் தீபலட்சுமி மற்றும் குடும்பத்தினர் சேலை, குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் வழங்கினர். இதில் தூத்துக்குடி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அன்புமணி, கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோயில் அறங்காவலர்கள் மகாராஜன், வெங்கடேஸ்வரி மற்றும் குலசை சிதம்பரம், அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்