துவரங்குறிச்சி அருகே சண்டையில் காட்டெருமை சாவு

துவரங்குறிச்சி, மே 8: துவரங்குறிச்சி அருகே உணவுக்காக முட்டி சண்டைபோட்டதில் ஒரு வயது காட்டெருமை பலியானது.திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த சீகம்பட்டி பகுதியில் குறத்தி குட்டு காப்புக்காடு பகுதியில் இருந்து நேற்று இரவு உணவிற்காக காட்டுப்பகுதியில் வந்த காட்டெருமைகள் சண்டையிட்டுக் கொண்டதில் ஒரு வயது மதிக்கத்தக்க காட்டெருமை காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இதுகுறித்து இப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்து பின்னர் அருகிலேயே பள்ளம் தோண்டி காட்டெருமை உடல் புதைக்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்