துவரங்குறிச்சி அருகே கிணற்றுக்குள் விழுந்த நாய் தீயணைப்பு துறையினர் மீட்பு

துவரங்குறிச்சி, டிச.16: துவரங்குறிச்சி அருகே கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். துவரங்குறிச்சி அருகேயுள்ள மருங்காபுரி ஒன்றியம் பில்லுப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவருடைய வளர்ப்பு நாய் அவரது தோட்டத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து முத்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிற்றின் உதவியுடன் நாயை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்