திருவையாறு அருகே பைக்கில் கொண்டு வந்த ரூ.63 ஆயிரம் பறிமுதல்

 

திருவையாறு,மார்ச்27: திருவையாறு அடுத்த கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவாழம்பொழில் பாலம் அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனனயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கண்டியூர் வந்து கொண்டிருந்த பைக்கை நிறுத்தினர். பைக்கை ஓட்டி வந்த மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியை சோ்ந்த செல்வகுமார் மகன் ஜெகன் என்பவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் ரூ. 63,000 இருந்தது.

அது குறித்து கேட்டபோது தான் திருவையாறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் சுய உதவி குழுவினரிடம் கடன் கொடுத்து வசூல் செய்வதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளதால் உரிய ஆவணம் ஏதுமின்றி எடுத்து வரப்பட்ட தொகை ரூ 63,000 பறிமுதல் செய்து திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தர்மராஜிடம் ஒப்படைத்தனர். தாசில்தார் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related posts

புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்