திருவெறும்பூர் அருகே கைலாயமுடையார் சிவன் கோயிலில் மாங்கனி திருவிழா

 

திருவெறும்பூர், ஜூலை 4: திருவெறும்பூர் அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன்கோயிலில் நடந்த மாங்கனி திருவிழாவில் கற்பகாம்பிகை பூ மற்றும் மாங்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவெறும்பூர் அருகே சோழமாதேவியில் ஆயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுப் புகழ்மிக்க கைலாயமுடையார் சிவன்கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் நினைவாக நடைபெற்றது.

இதனை அடுத்து கைலாயமுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து மலா் அலங்காரத்தில் காட்சிஅளித்த கைலாயமுடையார் சமேத கற்பகாம்பிகைக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு கற்பகாம்பிகை உடனுறை கைலாயமுடையாரை வழிபட்டு மாங்கனிகளை பிரசாதமாக பெற்று சென்றனர். மாங்கனி பூஜைகளை அர்ச்சகர்கள் தட்சிணாமூர்த்தி, ஆளப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை