திருவிடைமருதூர் அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

 

திருவிடைமருதூர், அக். 6: திருவிடைமருதூர் அருகே புதிதாக பாலம் கட்ட குழி தோண்டியபோது ஒன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே நாச்சியார்கோவில் அடுத்துள்ள மேலவிசலூர் நாகரசம்பேட்டை பாசன வாய்க்காலை சீரமைத்து, புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக நேற்று குழி தோண்டியபோது, அப்பகுதியில் மண்ணில் புதைந்திருந்த சுமார் ஒன்றரை அடி உயர ஐம்பொன்னாலான பெருமாள் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் மேலவிசலூர் வருவாய் ஆய்வாளர் பூமாவுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தகவலறிந்த நாச்சியார்கோவில் போலீசார் அங்கு வந்து சிலையை மீட்டு, வருவாய் ஆய்வாளர் பூமாவிடம் சிலையை ஒப்படைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்