திருமயம், ஆலங்குடியில் 20 அரசு பள்ளிகளில் மகாத்மா காந்தி நூலகம் அமைக்க ₹55 லட்சம் நிதி ஒதுக்கீடு

 

பொன்னமராவதி,மார்ச் 12: திருமயம், ஆலங்குடி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 20 அரசு பள்ளிகளில் மகாத்மா காந்தி நூலகம் அமைப்பதற்கு ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள என முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம் கூறினார். இது குறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம் கூறியதாவது: மாநிலங்கவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் திருமயம் தொகுதியில் உள்ள பொன்.புதுப்பட்டி, மேலைச்சிவபுரி, நகரப்பட்டி, ஆலவயல், சடையம்பட்டடி, நல்லூர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.2.75 லட்சம், திருமயம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லெம்பலக்குடி, அரிமளம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஆலங்குடி தொகுதியில் உள்ள ஆலங்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடகாடு, அனவயல் (எல்என்புரம்) மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளிகள், கொத்தமங்களம் ஆண்கள், பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, மறமடக்கி, கீரமங்களம், சிலட்டுர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.2.75 லட்சம் வீதம் 20 அரசு பள்ளிகளில் மகாத்மா காந்தி நூலகம் அமைப்பதற்கு ரூ.55 லட்சம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். அப்போது நகர தலைவர் பழனியப்பன், வட்டார தலைவர்கள் கிரிதரன், குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை