திருமயம் அருகே தைலமர காட்டுப்பகுதிக்குள் மூதாதையர்கள் விட்டு சென்ற அதிசயங்கள் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூப்பிரித்தல் விழா

புதுக்கோட்டை, பிப்.27: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதலை முன்னிட்டு நேற்று பூப்பிரித்தல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழா, கடந்த 25ம்தேதி பூச்சொரிதல் விழாவும், அதனை தொடர்ந்து வரும் 3ம்தேதி மாசி பெருந்திருவிழா தொடங்கி 18ம்தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 11ம்தேதி திருத்தேர் விழாவும் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. 2024ம் வருட மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் விழாவின் ஒருபகுதியாக பக்தர்களால் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வழங்கப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்பாளுக்கு சார்த்தப்பட்டது.

நேற்று பக்தர்களுக்கு பூக்களைப் பிரசாதமாக வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து, இந்துசமய அறநிலையத்துறை, புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் சார்பில் நடைபெற்ற பூச்சொரிதல் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, கலந்து கொண்டார். மேலும் மாவட்ட கலெக்டருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அம்பாளுக்கு சார்த்தப்பட்ட பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா, செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்