திருமயம் அருகே திருமணமான 4 மாதத்தில் வாலிபர் தற்கொலை

திருமயம், செப். 15: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பி.அழகாபுரி ராஜகோபால நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் கணேசன் (33). இவர் எலக்ட்ரீசியன் ஆக பணி செய்து வருகிறார். இதனிடையே இவருக்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கணேசனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கணேசனின் மனைவி கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் கணேசன் மனவிரக்தியில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு கணேசன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனிடையே வீட்டு அருகே மயங்கிய நிலையில் கணேசனை கண்ட உறவினர்கள் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கணேசனின் இறந்த உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை