திருமயம் அருகே அனுமதியின்றி கனிமம் ஏற்றிய 3 டிப்பர் லாரி பறிமுதல்

 

திருமயம். மார்ச் 11: திருமயம் அருகே அனுமதி இன்றி பாறாங்கல் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கண்ணனிபட்டி பகுதியில் அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் பாறாங்கல் ஏற்றி செல்வதாக திருமயம் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் திருமயம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூன்று டிப்பர் லாரிகளில் சுமார் 15 யூனிட் பாறாங்கல் அனுமதி இன்றி ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 லாரிகளையும் பாறாங்கல்லுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லாரி டிரைவர்கள் மான்கொம்பு சண்முகநாதன் (51), மாவூர் அழகு (42), கே.பள்ளிவாசல் சவேரிமுத்து (47) ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது