திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் அலுவலர்கள் உண்ணாவிரதம்

 

திருப்பூர், பிப். 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் மதன்குமார் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் அன்பழகன், குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை வெளியிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில் 30 பெண்கள் உள்பட 100 பேர் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை வரை இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் 22ம் தேதி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் மற்றும் 27ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு