திருப்புத்தூர் அருகே வடவன்பட்டி மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 10 பேர் காயம்

 

திருப்புத்தூர், மே 20: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே வடவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முனி நாதர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடு முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டில் இப்பகுதிகளை சேர்ந்த கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துண்டு, மாலை அணிவித்து அலங்கரித்து கொண்டுவரப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் அப்பகுதியில் உள்ள பொட்டலிலும், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளிலும் அவிழ்த்து விடப்பட்டன. விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு காளைகளை வீரத்தோடு அடக்க முற்பட்டனர். இதில் மாடு முட்டியதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

அரசூரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழிபாட்டுப் பயிற்சி முகாம்

கோத்தகிரியில் கனமழை

படுகர் தினவிழா கோலாகலம்: பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற மக்கள்