திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்பர்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருமலை: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்றிரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, வாகன மண்டபத்தில் இருந்து நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, நான்கு மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள்  ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கத்துடன் மனமுருக கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும், கோயில் யானைகளும், பக்தர்களின் கோலாட்டமும், நாதஸ்வர இசைக்கு மத்தியில் வீதி உலா நடைபெற்றது. இந்த மாதம் கடந்த 1ம் தேதி வருடாந்திர பிரமோற்சவத்தின் 5வது நாள் மலையப்பசுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 3 லட்சம் பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், பிரமோற்சவ கருட சேவையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுவாமி வீதி உலாவை காண முடியாத பக்தர்கள் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்….

Related posts

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் : நீதிமன்றம் அனுமதி

பிரதமர் பதவிக்கு எனது விருப்பம் ராகுல் காந்தி: கார்கே பரபரப்பு பேட்டி

உச்ச நீதிமன்ற கொலிஜியம் விவரங்களை கேட்ட மனுதாரருக்கு ரூ.25000 அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி