திருப்பதி அருகே ஆதரவின்றி தவித்த 2 தமிழக சிறுவர்கள் மீட்பு

காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் ரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் இரவு 2 சிறுவர்கள் அழுது கொண்டிருந்தனர். தகவலறிந்து கூடூர் நகர போலீசார் விரைந்து சென்று 2 சிறுவர்களையும் மீட்டனர். பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிறுவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள், சச்சின், சூரஜ் என தெரியவந்துள்ளது. இருவரும் தமிழில் பேசுகின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து ரயிலில் வந்தபோது எதிர்பாராத விதமாக வழி தவறியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர். 2 குழந்தைகளுக்கும் போலீசார் உணவு ஊட்டி பராமரித்து வருகின்றனர்….

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நாளையுடன் கெடு முடியும் நிலையில் ராகுல் தக்கவைத்துக் கொள்வது வயநாடா, ரேபரேலியா? இடைத்தேர்தலில் பிரியங்காவை களமிறக்க திட்டம்

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை