திருத்தணி பஜார் பகுதியில் மாணவியை காதலிப்பதில் கோஷ்டி மோதல்: 10 பேர் காயம்; 4 பேர் கைது

திருத்தணி: திருத்தணி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியை காதலிப்பது தொடர்பாக நேற்று மாலை பஜார் பகுதியில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக இன்று காலை 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் காதலித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே ஏற்கெனவே முன்விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பஜார் சாலை வழியாக ஏராளமான மாணவ-மாணவிகள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சீருடை அணிந்து வந்த பள்ளி மாணவர்களுக்கும் கலர் சட்டை அணிந்து வந்த மர்ம கும்பலுக்கும் இடையே மாணவியை காதலிப்பது தொடர்பாக பயங்கர அடிதடி மோதல் ஏற்பட்டது. இதில் அந்த பள்ளி மாணவ-மாணவிகள் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் 10க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், கலர் சட்டை அணிந்து வந்தவர்கள் அதே பள்ளி மாணவர்களா அல்லது வெளிநபர்களா என்பது தெரியவில்லை. திருத்தணி பஜார் பகுதியில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற அடிதடி மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களுக்கு இடையே வன்முறை தாக்குதல், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சென்று விசாரித்தனர். இதன்பின்னர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அந்த பள்ளியை சேர்ந்த மாணவியை காதலிப்பதில் ஏற்பட்ட முன்விரோத அடிதடி தகராறில் ஈடுபட்டதாக இன்று காலை செருக்கனூர் காலனியை சேர்ந்த சின்ராஜ் மகன் பிரபுராஜ் (22), கோவிந்தராஜ் மகன் சுகன்ராஜ் (22), விசிஆர்.கண்டிகையை சேர்ந்த ராமன் மகன் மோகன் (22), முனியப்பா மகன் கிஷோர் (22) ஆகிய 4 பேரையும் திருத்தணி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது